ADDED : ஜன 05, 2024 10:16 PM
நாடு முழுதும் ஒரே நேரத்தில், லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
இதுகுறித்து பொது மக்கள், தங்களது எழுத்துபூர்வமான ஆலோசனைகளை, வரும் 15ம் தேதிக்குள் https://once.gov.in அல்லது sc-hic@gov.in என்ற இ - மெயில் வழியாக தெரிவிக்கலாம்.
மேலும், 'உயர்நிலை குழு செயலர், ஒரே நாடு ஒரே தேர்தல், ஜோத்பூர் அதிகாரிகள் விடுதி, பிளாக் எண் 9, நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ் அருகில், சி ஹெக்சகன், இந்தியா கேட் சர்க்கிள், புதுடில்லி - 110 003' என்ற முகவரிக்கு, அஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம்.
கடந்த, 2023ல், தமிழக காவல் துறையில் பணிபுரிந்த போலீசாரில், கொலை, மர்ம மரணம், புற்றுநோய், சாலை விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால், 131 பேர் இறந்துள்ளனர்.
இவர்களில், 46 பேர் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர். அத்துடன், 2020 - 2023 வரை, ஏட்டு, இன்ஸ்பெக்டர்கள் என, பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த, 1,347 போலீசார் இறந்துள்ளனர்.