மருத்துவ கலந்தாய்வு தமிழகத்தில் ஒத்திவைப்பு
மருத்துவ கலந்தாய்வு தமிழகத்தில் ஒத்திவைப்பு
மருத்துவ கலந்தாய்வு தமிழகத்தில் ஒத்திவைப்பு
ADDED : செப் 10, 2025 02:04 AM

சென்னை:அகில இந்திய மருத்துவ படிப்பு கலந்தாய்வின், இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் துவங்க இருந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் மருத்துவ இடங்களை அதிகரிக்க, தேசிய மருத்துவ ஆணையம் முடிவெடுத்துள்ளது. புதிய இடங்களை, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அகில இந்திய ஒதுக்கீடு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாநில ஒதுக்கீட்டில் காலியாக உள்ள, 500க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை நிரப்ப, இன்று கலந்தாய்வு நடைபெற இருந்தது. அகில இந்திய ஒதுக்கீடு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாநில ஒதுக்கீடு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.