ADDED : செப் 10, 2025 02:04 AM
மதுரை : மதுரை தியாகராஜர் மேலாண்மைப் பள்ளியில் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் விழிப்புணர்வு கண் வங்கி மேலாளர் சரவணன் தலைமையில் நடந்தது.
கண்தானம் செய்யும் முறை, பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கண்தானம் குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாட்டை கல்லுாரியின் பெண்கள் மேம்பாட்டு பிரிவு செய்தது.