பெண்ணிடம் செயின் பறிப்பு மயிலாடுதுறை ஆசாமி கைது
பெண்ணிடம் செயின் பறிப்பு மயிலாடுதுறை ஆசாமி கைது
பெண்ணிடம் செயின் பறிப்பு மயிலாடுதுறை ஆசாமி கைது
ADDED : மே 22, 2025 04:00 AM

புவனகிரி: புவனகிரியில், நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த மயிலாடுதுறை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி ராணி,50; புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் உள்ள சித்த மருத்துவமனைக்கு, கடந்த மாதம் 20ம் தேதி பஸ்சில் வந்தார். கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி மதியம் 1.15 மணியளவில் மருத்துவமனைக்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ராணி கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிதம்பரம் கிரைம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் மயிலாடுதுறை அருகே திருவாளபுத்துார் வரதம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டைட்டல்,41; என்பதும், இவர் ராணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. அதன் பின் புவனகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புவனகிரி போலீசார் விசாரணைக்கு பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.