/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பரோட்டோ மாஸ்டர் மாயம் கடலுாரில் மீட்பு பரோட்டோ மாஸ்டர் மாயம் கடலுாரில் மீட்பு
பரோட்டோ மாஸ்டர் மாயம் கடலுாரில் மீட்பு
பரோட்டோ மாஸ்டர் மாயம் கடலுாரில் மீட்பு
பரோட்டோ மாஸ்டர் மாயம் கடலுாரில் மீட்பு
ADDED : மே 22, 2025 03:59 AM
புதுச்சேரி: காலாப்பட்டில் மாயமான பரோட்டோ மாஸ்டரை, கடலுாரில் போலீசார் மீட்டனர்.
கடலுார் அடுத்த சேடப்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல் (எ) ஆகாஷ், 24; பரோட்டா மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் மணிமாறனுடன், காலாப்பட்டு இ.சி.ஆரில் உள்ள தனியார் திருமண நிலையத்திற்கு சமையல் வேலைக்காக வந்தார். மதியம் 2:00 மணி அளவில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
இரவு வரை ராகுல் மண்டபத்திற்கு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த மணிமாறன் சேடப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் காலாப்பட்டு போலீசில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸ் விசாரணையில் ராகுலுடைய மொபைல் சிக்னல் கடைசியாக கடலுார், மஞ்சஞ்குப்பத்தில் காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, கடலுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ராகுல் உறவினர்கள் நேற்று காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இந்நிலையில், கடலுார் முதுநகரில் சுற்றித்திருந்த ராகுலை கடலுார் போலீசார் நேற்று மாலை பிடித்து, ஸ்டேஷனில் வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, அவரது உறவினர் கடலுார் புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவம் காலாப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.