Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

ADDED : ஜன 05, 2024 06:51 PM


Google News
Latest Tamil News
திருப்பாவை - பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமை இழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளேபுலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டுஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்திருப்பெருந்துறையுறை சிவபெருமானேஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட்கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் துாவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us