Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

ADDED : ஜன 07, 2024 08:22 PM


Google News
Latest Tamil News
திருப்பாவை - பாடல் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டுபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடையசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமைமிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனை யுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 3

கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கீச்சிடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us