மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம்
மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம்
மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம்
ADDED : ஜன 31, 2024 01:16 AM
மதுரை:மதுரை, தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு, 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
இதற்கு, 2019 ஜனவரியில் பிரதமர் மோடி, 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார். ஜப்பானின் ஜெய்க்கா எனும் பன்னாட்டு நிதி நிறுவனத்துடன் 2021 மார்ச்சில் கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொத்த தொகையில், 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும், மீதி, 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது.
ஆண்டுதோறும், 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரியில் படிப்பை தொடர்ந்தனர். 2023 ஆக., 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெற்ற நிலையில், 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
தற்போது, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.