ADDED : ஜூன் 14, 2025 03:25 AM
சென்னை: முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி:
கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி, யாருடைய ஆட்சியில் தீவிரப்படுத்தப்பட்டது. மத்தியில் காங்., இங்கு தி.மு.க., இருந்தபோது, தொல்லியல் துறைக்கு ஒதுக்கிய தொகை, 55 லட்சம் ரூபாய்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின், தமிழக அகழ்வாராய்ச்சிக்கு, 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கீழடி ஆய்வை உலக அளவிற்கு எடுத்துச் சென்றது மத்திய அரசு.
ஆனால், பா.ஜ.,விற்கு பெயர் பெற்று தந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வினர் கீழடியை வைத்து கீழ்த்தரமாக அரசியல் செய்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.