'தி.மு.க.,வை போல பா.ஜ.,வும் எங்களுக்கு பகையாளி தான்' முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
'தி.மு.க.,வை போல பா.ஜ.,வும் எங்களுக்கு பகையாளி தான்' முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
'தி.மு.க.,வை போல பா.ஜ.,வும் எங்களுக்கு பகையாளி தான்' முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
ADDED : பிப் 11, 2024 12:53 AM
கோவை:கோவையில் அ.தி.மு.க., சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பின், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:
பா.ஜ.,வுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை பன்னீர்செல்வம் செய்து வருகிறார். தேர்தலுக்கு பின், அவர் பா.ஜ.,வில் இணைந்து விடுவார்.
பா.ஜ., தவிர்த்து, யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணியில் இணையலாம். எங்களை நோக்கித்தான் கட்சிகள் வரும். அ.தி.மு.க.,வினரிடம் மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுக்கக் கூடாது என, தி.மு.க., தடுக்கிறது.
பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க., தமிழகத்துக்கு என்ன செய்தது? மாநில உரிமைகளுக்காக பாடுபட்டது அ.தி.மு.க., தான். கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க.,
பொது சிவில்சட்டத்தை அ.தி.மு.க., எதிர்க்கும். சிறுபான்மை மக்களுக்கு, நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். அண்ணாமலை பல கருத்துக்களை தேவையில்லாமல் கூறி மாட்டிக் கொள்கிறார். அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., எப்படி பகையாளியோ, அதேபோல் அரசியலில் பா.ஜ.,வும் பகையாளி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.