Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கூடங்குளம் மின் உற்பத்தி 75 நாட்கள் நிறுத்தப்படும்

கூடங்குளம் மின் உற்பத்தி 75 நாட்கள் நிறுத்தப்படும்

கூடங்குளம் மின் உற்பத்தி 75 நாட்கள் நிறுத்தப்படும்

கூடங்குளம் மின் உற்பத்தி 75 நாட்கள் நிறுத்தப்படும்

ADDED : ஜன 06, 2024 08:01 PM


Google News
சென்னை:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதில் தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி மின்சாரம், பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகம் இருந்தும், மின் தேவை குறையவில்லை.

தினமும் பகலில், 15,000 மெகா வாட்; மாலையில், 16,000 மெகா வாட்டாகவும் மின் தேவை உள்ளது. அதை பூர்த்தி செய்வதில், கூடங்குளம் மின்சாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், கூடங்குளம் மின் நிலையத்தின் முதல் அலகில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக, வரும், 24ம் தேதி முதல், 75 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. ஏப்., 11ல் மீண்டும் உற்பத்தி துவக்கப்பட உள்ளது.

இதனால் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, 4,320 மெகா வாட் திறன் உடைய அனல் மின் நிலையங்களில், முழு அளவுக்கு உற்பத்தி செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக நிலக்கரியை மிச்சப்படுத்த, அந்த மின் நிலையங்களில் தற்போது, 3,000 மெகா வாட்டிற்கு குறைவாக தான் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, மின் வாரியத்திடம், 10 நாட்களுக்கு தேவையான, 8 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us