கருணாநிதி நினைவிடம் 15 நாளில் திறக்க முடிவு
கருணாநிதி நினைவிடம் 15 நாளில் திறக்க முடிவு
கருணாநிதி நினைவிடம் 15 நாளில் திறக்க முடிவு
ADDED : பிப் 12, 2024 05:07 AM
சென்னை : கருணாநிதி மற்றும் அண்ணாதுரை நினைவிடங்களை, அடுத்த 15 நாட்களில் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை மெரினாவில், அண்ணாதுரை நினைவிடத்திற்கு பின்புறம், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதி நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இங்கிருந்து, 200 மீட்டரில் மெரினா கடலில், 100 அடி உயரத்திற்கு பேனா சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அத்திட்டத்தை அரசு ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், கருணாநிதி நினைவிடம் கட்டும் பணி முடிவடைந்துஉள்ளது. அதற்கு முன் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தை புனரமைக்கும் பணி, தடுப்புச்சுவர் கட்டும் பணி, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
இவை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், இரண்டு நினைவிடங்களையும், பொது மக்கள் பார்வைக்கு திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.
அடுத்த 15 நாட்களில் பணிகளை முடிக்க, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். அதனால், இரவு, பகலாக அங்கு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.