Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்

சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்

சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்

சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்

UPDATED : ஜூன் 21, 2024 12:11 PMADDED : ஜூன் 21, 2024 09:12 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள், சபாநாயகர் உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடா் நேற்று (ஜூன் 20) துவங்கியது. சட்டசபை காலை 10 மணிக்குக் கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மற்றும் மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை வாசித்து, அதற்கான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் துவங்குகிறது. இன்று காலையில் நீர்வளம், தொழிலாளர் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மாலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளா்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலன், சமூகநலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெறவுள்ளன.

இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 49 பேர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்குமாறு அதிமுக தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Image 1283937 இதனையடுத்து அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதன்படி எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.

தவிர்க்க முடியாத காரணம்


பிறகு அவை முன்னவர் துரைமுருகன் கூறியதாவது: சட்டசபை கேள்வி நேரம் முடிந்த பிறகே விவாதிக்க முடியும். விதிகளுக்கு உட்பட்டும் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். விதிகள் தெரிந்தும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்த பிரச்னையாக இருந்தாலும் நேரமில்லாத நேரத்தில் தான் விவாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நீக்கம்


சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை. மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் வெளியேற்றப்பட்டனர். அமளியில் ஈடுபட்டோர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றார்.

வெளிநடப்பு

பிறகு, கள்ளச்சாராய பலி தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது, பாமக, பாஜ, எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us