நம் பரதக் கலையே சிறந்தது நீதிபதி மகாதேவன் பெருமை
நம் பரதக் கலையே சிறந்தது நீதிபதி மகாதேவன் பெருமை
நம் பரதக் கலையே சிறந்தது நீதிபதி மகாதேவன் பெருமை
UPDATED : ஜன 07, 2024 02:58 AM
ADDED : ஜன 07, 2024 02:15 AM

சென்னை: நுண்கலைகளை ஊக்குவிக்கும் நிறுவனமாக 'அப்பாஸ் கல்ச்சுரல்' விளங்கி வருகிறது. 32ம் ஆண்டாக, ஏழு நாள் கலை விழாவை சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் துவங்கியது.
விழாவை, நீதியரசர் மகாதேவன் துவக்கி வைத்து பேசியதாவது:
அப்பாஸ் கல்ச்சுரல், 42 ஆண்டுகளாக நமக்கு, கலை சேவையை வழங்கி வருகிறது.
இசையும், நாட்டியமும் நம் வாழ்க்கையோடு பொருந்தியுள்ளது. அதுகுறித்து, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும், அதன் கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட இசை உள்ளது.
இதில், நம் பாரம்பரிய இசை தான் சிறந்தது என அறியப்பட்டுள்ளது. கர்நாடக இசை உலகெங்கும் சேர்ந்துள்ளது.
கன்னட நுால் ஆராய்ச்சியின்படி, உலகில் உள்ள நாட்டியங்களில் நம் நாட்டின் பரதக் கலையே சிறந்தது என அறியப்பட்டது.
கம்பன்கூட, நாட்டியத்திற்கான சிறந்த பாடலை தந்துள்ளார். பல கலைஞர்கள், நாட்டியத்தை ஓங்கி வளரச்செய்தனர். அதை உலகம் முழுதும் கொண்டுச் சென்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.