Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பன்னீர் பற்றி பேசவே வருத்தமாக இருக்கிறது

பன்னீர் பற்றி பேசவே வருத்தமாக இருக்கிறது

பன்னீர் பற்றி பேசவே வருத்தமாக இருக்கிறது

பன்னீர் பற்றி பேசவே வருத்தமாக இருக்கிறது

ADDED : ஜன 12, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
திராவிடக் கட்சி ஆட்சியில் இருந்த கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக தமிழகம் விருது பெற்றிருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியிலும், தமிழகத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வி, விவசாயம் என பல துறைகளில் விருதுகள் வழங்கியுள்ளனர். அதை மறைத்து தான்தோன்றி தனமாக அண்ணாமலை பேசி வருகிறார். அவர் போலீசாக இருந்தவர். அரசியலுக்கு புதிது. குற்றவாளிகளை பார்த்து பழகியதால் அப்படித் தான் இருப்பார்.

ராமர் கோவில் விவகாரத்தை, அ.தி.மு.க., அரசியலாக்க விரும்பவில்லை.

தி.மு.க.,வில் வாரிசு அரசியல் நடக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் சொந்தங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ.,- எம்.பி., ஆக்கினார்.

தற்போது அவரது மகன் ஸ்டாலினும், வாரிசான உதயநிதியை அமைச்சராக்கியுள்ளார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி, உதய நிதியை துணை முதல்வராகவும் ஆக்கலாம். பன்னீர்செல்வம் தொண்டர்களே இல்லாத நிலையிலும் தொண்டர்கள் உரிமை குழு நடத்தி போராடி வருகிறார்.

எல்லா விஷயத்திலும் சுயநலமாகவே செயல்படும் அவரை பற்றி பேசுவதற்கே வருத்தமாக இருக்கிறது.

முனுசாமி,

துணை பொதுச்செயலர், அ.தி.மு.க.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us