Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஏ.டி.ஆர்., விமானங்களுக்கு 'டெர்மினல்' மாற்றம் இருக்கும் பிரச்னையில் இது வேறயா?

ஏ.டி.ஆர்., விமானங்களுக்கு 'டெர்மினல்' மாற்றம் இருக்கும் பிரச்னையில் இது வேறயா?

ஏ.டி.ஆர்., விமானங்களுக்கு 'டெர்மினல்' மாற்றம் இருக்கும் பிரச்னையில் இது வேறயா?

ஏ.டி.ஆர்., விமானங்களுக்கு 'டெர்மினல்' மாற்றம் இருக்கும் பிரச்னையில் இது வேறயா?

ADDED : ஜூன் 05, 2025 11:30 PM


Google News
சென்னை:சென்னை விமான நிலையத்தில், 'இண்டிகோ' நிறுவனத்தின் ஏ.டி.ஆர்., வகை விமானங்களுக்கான முனையத்தை மாற்றியது, பயணியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், 'இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்' போன்ற நிறுவனங்களின் விமானங்கள், டி1 முனையத்திலும், 'ஏர் இந்தியா' குழுமங்களின் விமானங்கள், டி4 முனையத்திலும் இருந்து இயக்கப்படுகின்றன.

இண்டிகோ நிறுவனம், சிறிய ரக ஏ.டி.ஆர்., விமானங்களை, மதுரை, துாத்துக்குடி, சேலம், மைசூரு, திருச்சி, விஜயவாடா, கோழிக்கோடு, மங்களூரு, ராஜமுந்திரி என, ஒன்பது நகரங்களுக்கு இயக்குகிறது.

தினமும், 30க்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்குகிறது. இந்த விமானங்கள் அனைத்தும், டி1 என்ற முனையத்தில் இருந்து இயக்கப்பட்டன.

விரிவாக்க பணிகள் காரணமாக, அவை டி4 முனையத்திற்கு, கடந்த 1ம் தேதி மாற்றப்பட்டன.

அதாவது, அந்நிறுவனத்தின் சிறிய ரக விமானங்கள், முனையம் நான்கில் இருந்து புறப்படும்; வருகை தரும் விமானங்கள் முனையம் ஒன்றுக்கு வரும் என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்கட்டமைப்பு, பார்க்கிங், பிக் - அப் பாயின்ட், வைபை போன்ற பல பிரச்னைகள் உள்ளன. தற்போது, முனையம் மாற்றமும் அதில் சேர்ந்துள்ளதால், பயணியருக்கு தலைவலியாக மாறி உள்ளது.

இதுகுறித்து, விமான பயணியர் கூறியதாவது:

சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளுக்கு, அதிகப்படியான விமானங்களை இண்டிகோ இயக்குகிறது.

அதில் ஏ.டி.ஆர்., வகை விமானங்களும் உண்டு. குறிப்பாக துாத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை செல்வோர், டி1 என்ற முனையத்தில் இருந்தே செல்வர்.

நீண்ட நாட்களாக அங்கேயே விமானங்களை இயக்கியதால் பிரச்னை இல்லை. திடீரென இடத்தை மாற்றியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மாற்றம் சேவையை எளிமையாக்குவதாக இல்லை.

டி4 முனையத்திற்கும், டி1 முனையத்திற்கும் இடையில், 1 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். புதிதாக வருபவர்களுக்கு புது பிரச்னையாக மாறி இருக்கிறது.

புறப்படுவதற்கு ஒரு முனையமும், வருகைக்கு ஒரு முனையமும் என்று மாற்றி இருக்கின்றனர். பயணியர் சிரமமின்றி பயன்படுத்தும் வகையிலான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இண்டிகோ விமானம் என்றால், முனையம் ஒன்று தான் உடனடியாக நினைவுக்கு வரும். அடிக்கடி ஏ.டி.ஆர்., வகை விமானங்களில் பயணிப்பவர்களுக்கு, இந்த மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும். வருகை பகுதி, ரன்வே என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றில் அதிகாரிகள் கவனம் செலுத்தலாம். விரிவாக்க பணிகளுக்காக மாற்றி அமைத்திருக்கிறோம் என்பது ஏற்புடையதாக இல்லை.

- தயானந்த கிருஷ்ணன், சமூக ஆர்வலர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us