Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ காமராஜரை பார்த்து அண்ணாமலை கேள்வி எழுப்புகிறாரா: சேகர்பாபு

காமராஜரை பார்த்து அண்ணாமலை கேள்வி எழுப்புகிறாரா: சேகர்பாபு

காமராஜரை பார்த்து அண்ணாமலை கேள்வி எழுப்புகிறாரா: சேகர்பாபு

காமராஜரை பார்த்து அண்ணாமலை கேள்வி எழுப்புகிறாரா: சேகர்பாபு

ADDED : மார் 25, 2025 06:23 AM


Google News
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

தி.மு.க.,வில் இருக்கும் அமைச்சர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அவர், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இருக்கும் அமைச்சர்களை மனதில் வைத்து சொல்லி இருப்பார்.

அதுமட்டுமல்ல, படிக்காதவர்கள் எப்படி பள்ளிக் கல்வியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை. இது காமராஜரை பார்த்து கேட்கும் கேள்வியா?

என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி என அண்ணாமலை சொல்கிறார். அப்படியென்றால், அவர் லஞ்சப் பேர்வழி என்று நான் சொல்கிறேன்.

அண்ணாத்துரையால் வளர்க்கப்பட்ட தி.மு.க., கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். தி.மு.க., பலகோடி மக்களுக்கு நிழல் தரும் ஆலமரம். ஆனால், பா.ஜ., ஊசிப் போன பண்டம். அது யாருக்கும் பயன்படாது.

பா.ஜ.,வை 2026ல், மக்கள் துாக்கி எறிய தயாராக இருக்கின்றனர்.

இந்திய வரைப்படத்தில் கீழே இருக்கிற தமிழகத்தை, வரைபடத்தின் மேலே இருக்கும் அத்தனை மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில், 40 இடங்களையும் கைப்பற்றி பா.ஜ.,வை அலறவிட்டுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலிலும் அலற விடுவோம். 200 இடங்களில் வெற்றி என்பது நிச்சயம்; 234 என்பது லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us