/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2.35 கி.கிராம் கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது 2.35 கி.கிராம் கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது
2.35 கி.கிராம் கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது
2.35 கி.கிராம் கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது
2.35 கி.கிராம் கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது
ADDED : மார் 25, 2025 06:24 AM
போத்தனுார்; கோவை, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராமர், போத்தனூர் பிரதான சாலையில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தார். அவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த, தற்போது குறிச்சி பிரிவில் வசிக்கும் துலால் ஷேக்.24 மற்றும் போத்தனூர் பிரதான சாலையிலுள்ள அப்துல் சத்தார், 28 என தெரிந்தது.
இருவரும் விற்பனைக்காக, 1.2 கி.கிராம் கஞ்சா வைத்திருந்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
* செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கருப்புசாமி பாண்டியன், பல்லடம் சாலையில் ரோந்து சென்றார். தனியார் நிறுவனம் அருகே, ஆளில்லா வீட்டின் முன் நின்றிருந்த இருவரை விசாரித்தார்.
சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சுஜித், 23, பரத், 23 என தெரிந்தது. இருவரும் விற்பனைக்காக, 1.15 கி.கிராம் கஞ்சா வைத்திருந்தனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.