அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை பிப். 16 க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை பிப். 16 க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை பிப். 16 க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜன 25, 2024 01:46 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி கோர்ட் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவரது குடும்பத்தினர் மீது சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை பிப். 16ம் தேதிக்கு நேற்று ஒத்திவைத்தது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 - 2006 ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட குடும்பத்தினர் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணை துாத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உதவ அனுமதி கோரி அதே கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
நேற்று நடந்த இம்மனு மீதான விசாரணையை நீதிபதி (பொ) சுவாமிநாதன் பிப். 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.