பாம்பன் பாலத்தை கடந்த இந்திய கடற்படை கப்பல்
பாம்பன் பாலத்தை கடந்த இந்திய கடற்படை கப்பல்
பாம்பன் பாலத்தை கடந்த இந்திய கடற்படை கப்பல்
ADDED : ஜன 05, 2024 11:08 PM

ராமேஸ்வரம்:இந்திய கடற்படை கப்பல் பழுது நீக்கப்பட்டு 12 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்குப்பாலத்தை கடந்து சென்றது.
கேரளா கொச்சியில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஆந்திரா விசாகப்பட்டினம் கடற்படை முகாமிற்கு செல்ல டிச.24ல் பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்தது. அப்போது வழித்தடம் விலகி பாறையின் மீது ஏறியதால் கப்பல் இன்ஜின் இலை(புரபல்லர்) சேதமடைந்தது.
கப்பலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மீண்டும் அதனை பாம்பன் தெற்கு கடற்கரைக்கு கொண்டு வந்து கரை ஏற்றினர். கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட கப்பல் பொறியாளர்கள் சேதமடைந்த இலையை அகற்றி புதிதாக பொருத்தினர்.
நேற்று ரயில் துாக்கு பாலம் திறந்ததும் 12 நாட்களுக்கு பின் அக்கப்பல் பாலத்தை கடந்து விசாகபட்டினம் சென்றது. மேலும் 60 கேரள ஆழ்கடல் விசைப்படகுகள் சீசனில் நாகை கடலில் மீன்பிடிக்க பாம்பன் பாலத்தை வரிசையாக கடந்து சென்றன.