தமிழக முதல்வர் ஸ்டாலினால் சென்னை நோக்கி வந்த இந்தியா
தமிழக முதல்வர் ஸ்டாலினால் சென்னை நோக்கி வந்த இந்தியா
தமிழக முதல்வர் ஸ்டாலினால் சென்னை நோக்கி வந்த இந்தியா
ADDED : மார் 23, 2025 03:10 AM

திண்டுக்கல்: தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி:
தென் மாநிலங்கள், பஞ்சாப் போன்ற வட மாநிலங்களுக்கு பார்லிமென்ட் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவே, மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில், சம நீதி கேட்டு, இந்தியாவே சென்னை நோக்கி வந்துள்ளது. பல மாநில முதல்வர்கள், பிரதிநிதிகள் முதல்வர் ஸ்டாலின் கூட்டியிருக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மும்மொழிக் கொள்கை என்ற வார்த்தைக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடம் கிடையாது. இன்னும் ஒரு நுாற்றாண்டு காலமானாலும், மும்மொழிக் கொள்கையை திணிக்க முடியாது.
400 தொகுதிக்கு மேல் கைப்பற்றி லோக்சபாவில் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என கொக்கரித்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து 'இண்டி' கூட்டணி அமைத்ததன் வாயிலாகவே, பா.ஜ., மைனாரிட்டி அரசமைக்க வேண்டியதானது.
இவ்வாறு அவர் கூறினார்.