ADDED : ஜன 02, 2024 10:21 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரபிக்கடலின் தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெறும்.
இதனால், லட்சத்தீவு, தென் கிழக்கு, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தின் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில், அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில் அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இரவு மற்றும் அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.