Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நிரம்பும் தருவாயில் நீங்காத ஆபத்து ராமநதி அணை பாதுகாக்கப்படுமா?

நிரம்பும் தருவாயில் நீங்காத ஆபத்து ராமநதி அணை பாதுகாக்கப்படுமா?

நிரம்பும் தருவாயில் நீங்காத ஆபத்து ராமநதி அணை பாதுகாக்கப்படுமா?

நிரம்பும் தருவாயில் நீங்காத ஆபத்து ராமநதி அணை பாதுகாக்கப்படுமா?

ADDED : ஜூன் 01, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராமநதி அணைக்கட்டு நிறையும் தருவாயில் ஆபத்தான நிலையில் உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணை நீர்மட்டம், நேற்று, 5 அடி உயர்ந்து 118 அடியை எட்டியது.

அருகில், 156 அடி உயரமுள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம், நேற்று, 2 அடி உயர்ந்து 144 அடியை எட்டியது. 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணை, நேற்று, 2 அடி உயர்ந்து 91 அடியை எட்டியது. 52 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம், 3 அடி உயர்ந்து 45 அடியை எட்டியது.

தென்காசி மாவட்டத்தில், 85 அடி உயரமுள்ள கடனா நதி அணை, நேற்று, 11 அடி உயர்ந்து 73 அடியை எட்டியது. 84 அடி உயரமுள்ள ராமநதி அணை நீர்மட்டம், 4 அடி உயர்ந்து, நேற்று காலை, 76 அடி எட்டியது. 72 அடி உயரமுள்ள கருப்பாநதி அணைக்கட்டு அணை நீர்மட்டம் நேற்று காலை, 4 அடி உயர்ந்து 63 அடியை எட்டியது. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணைக்கட்டு நீர்மட்டம் 6 அடி உயர்ந்து, 99 அடி எட்டியது.

ஏற்கனவே குண்டாறு அணை அதன் அதிகபட்ச அளவான 36 அடியை கடந்து தற்போது தண்ணீர் வெளியேறுகிறது.

ராமநதி பாதிப்பு


தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணையின் உயரம், 84 அடி ஆகும். தற்போது, 76 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால், அணையின் கரைகளில் அரிப்பெடுத்து கரைந்து வருகிறது.

பொதுப்பணித்துறையினர், மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பிரச்னை சில மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

தற்போது அதன் முழு கொள்ளளவான 84 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அணை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us