மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுவேன்: முருகன் பேட்டி
மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுவேன்: முருகன் பேட்டி
மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே பாலமாக செயல்படுவேன்: முருகன் பேட்டி
UPDATED : ஜூன் 14, 2024 05:45 PM
ADDED : ஜூன் 14, 2024 05:22 PM

சென்னை: மத்திய அரசுக்கும்- தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, முருகன் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட எனக்கு, பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார். 2047 ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். அதில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பை மோடி அளித்துள்ளார்.
மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன். முன்பை போல் தமிழகத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தவறான மற்றும் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முருகன் கூறினார்.