/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தைதிருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
UPDATED : ஜூன் 14, 2024 05:18 PM
ADDED : ஜூன் 14, 2024 05:11 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியர்கள் பூட்டினர். பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர். இதன் பிறகு மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, பள்ளியில் இருந்து தப்பித்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பள்ளிக்கு விரைந்த வனத்துறையினரும், போலீசாரும், சிறுத்தையை தேடி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளபகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.