'டம்மி என தெரிந்தும் துணை முதல்வரானேன்!'
'டம்மி என தெரிந்தும் துணை முதல்வரானேன்!'
'டம்மி என தெரிந்தும் துணை முதல்வரானேன்!'
ADDED : ஜன 04, 2024 09:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
இரண்டு முறை முதல்வர் பதவியில், ஜெயலலிதா என்னை தான் நியமனம் செய்தார். துணை முதல்வர் பதவி, 'டம்மி' என்பதால் வேண்டாம் என்றேன். இருப்பினும், வலுக்கட்டாயமாக பதவி ஏற்க வைத்தனர்.
செய்தி துறை அதிகாரிகளை கொண்டு, என்னை பற்றி விமர்சனம் செய்து, பழனிசாமி எழுத வைத்தார். என்னை சுற்றி சதி வேலைகளை செய்தனர். பதவி வழங்கிய சசிகலாவையே கொச்சை மொழியில் பழனிசாமி பேசினார்.
பொதுச்செயலர் பதவிக்கு, 10 மாவட்ட செயலர்கள் பரிந்துரை வேண்டுமாம். தங்கமணி, வேலுமணி வேண்டுமானால், போட்டியிடலாம். ஆனால், சாமானியன் போட்டியிட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.