வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்
வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்
வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்

விடுதியில் முடங்கினோம்
கிருஷ்ணகிரி திரும்பிய மாணவியர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் அனைவரும் வங்கதேசத்தில் சிலேட் பகுதியில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறோம். இதில், சிலர் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஜூலை 17ல், வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. இதன் விபரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக தெரிவிப்பதற்குள் இணையதளம் முடங்கியது.
நிலைமை மோசம்
கடந்த இரு நாட்கள் முன்பு, கலவரம் தீவிரமடைந்ததை துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டோம். எங்கள் பெற்றோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சண்யாவின் மொபைலில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த மொபைல் மூலம், 60 மாணவியர் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர்.
முடிவுக்கு வந்த மூன்று நாள் பதற்றம்
கடந்த, ஜூலை 20, மதியம், 3 மணியளவில் சிலேட் பகுதியிலிருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுஹாத்திக்கு ராணுவ பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டோம். பின்னர் கவுஹாத்திலிருந்து விமானம் மூலம் கிளம்பிய நாங்கள் சென்னை வந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். மூன்று நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர பீதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.