பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக ஆனந்தன் நியமனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக ஆனந்தன் நியமனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக ஆனந்தன் நியமனம்
ADDED : ஜூலை 22, 2024 03:10 PM

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அவரது மனைவியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைமை மும்முரமாக ஆலோசித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.