Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வீடு, மனை ஒதுக்கீடு வாரிய விதிகளில் மாற்றம் வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை

வீடு, மனை ஒதுக்கீடு வாரிய விதிகளில் மாற்றம் வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை

வீடு, மனை ஒதுக்கீடு வாரிய விதிகளில் மாற்றம் வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை

வீடு, மனை ஒதுக்கீடு வாரிய விதிகளில் மாற்றம் வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை

ADDED : செப் 20, 2025 08:10 PM


Google News
சென்னை:வீட்டுவசதி வாரிய வீடு, மனை ஒதுக்கீட்டுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வீடு, மனை ஒதுக்கீட்டில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வழிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதேபோன்று, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக, நடைமுறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான பணிகளை, வீட்டுவசதி வாரியம் முடுக்கி விட்டு உள்ளது.

அதன்படி, வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர், நிதித் துறை துணை செயலர், நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு பரிந்துரை அடிப்படையில், திருத்தப்பட்ட வாரிய விதிகளின் தொகுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வீடு, மனை ஒதுக்கீட்டுக்கான விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:

* வீடு, மனை ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெற, 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்

*அரசின் உத்தரவு அடிப்படையில், இடஒதுக்கீட்டு விகிதாசார அளவுகள் பின்பற்றப்படும்

* ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் வீடு, மனைகளின் மொத்த எண்ணிக்கையில், 30 சதவீத அளவுக்கான விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும்

* தேர்வு செய்யப்பட்ட நபர் ஒதுக்கீட்டை பெற முன்வரவில்லை என்றால், அவர் செலுத்திய தொகையில், 0.5 சதவீதம் அல்லது, 10,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்

* ஒதுக்கீட்டுக்கான குலுக் கலில் ஒருவர் தகுதி பெறாத நிலையில், அவர் செலுத்திய ஆரம்ப தொகையில், 0.5 சதவீதம் அல்லது, 10,000 ரூபாய் கழித்து, மீதி தொகை திரும்ப தரப்படும்

* விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளித்து இருந்தால், சம்பந்தப்பட்டவர் செலுத்திய ஆரம்ப தொகை திரும்ப தரப்படாது.

இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us