Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வரலாறு மலிவான அரசியலுக்காக காத்திருக்காது: தங்கம் தென்னரசு

வரலாறு மலிவான அரசியலுக்காக காத்திருக்காது: தங்கம் தென்னரசு

வரலாறு மலிவான அரசியலுக்காக காத்திருக்காது: தங்கம் தென்னரசு

வரலாறு மலிவான அரசியலுக்காக காத்திருக்காது: தங்கம் தென்னரசு

ADDED : ஜூன் 10, 2025 02:46 PM


Google News
Latest Tamil News
சென்னை: '' வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்'', தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், ''இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்''என மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதலில் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us