6244 பணியிடங்களுக்கு ஜூனில் 'குரூப் 4' தேர்வு
6244 பணியிடங்களுக்கு ஜூனில் 'குரூப் 4' தேர்வு
6244 பணியிடங்களுக்கு ஜூனில் 'குரூப் 4' தேர்வு
ADDED : ஜன 31, 2024 02:16 AM
சென்னை:தமிழக அரசு துறைகளில் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 6244 பதவிகளுக்கு 'குரூப் 4' தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் மாதம் தேர்வு நடக்க உள்ளது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. பிப்ரவரி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் வழங்கப்படும். குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறுவர். கூடுதல் விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.