விதிகளின்படி கிராம சபை ஐகோர்ட் அறிவுரை
விதிகளின்படி கிராம சபை ஐகோர்ட் அறிவுரை
விதிகளின்படி கிராம சபை ஐகோர்ட் அறிவுரை
ADDED : ஜன 25, 2024 01:03 AM
சென்னை:'விதிகளின்படி, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான மவுரியா தாக்கல் செய்த மனுவில், 'கிராம சபை விதிகளின்படி, தமிழகம் முழுதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகினர்.
விதிகளின்படிகிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறினால், தகுந்த நடவடிக்கையை எடுக்கும்படியும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.