பஸ், டாக்ஸி, ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
பஸ், டாக்ஸி, ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
பஸ், டாக்ஸி, ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
ADDED : செப் 10, 2025 01:59 AM

சென்னை:தமிழகத்தில், பஸ், கால் டாக்ஸி, ஆட்டோ உட்பட, அனைத்து வகையான வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி கட்டாயமாக்கப்பட உள்ளது.
சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் தவிர, மற்ற அனைத்து வகையான வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என, மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தமிழகத்தில் அரசு, தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள், ஆட்டோ, அனைத்து வகை கால் டாக்ஸிகள், வேன்கள், லாரிகள் போன்ற அனைத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
வாகனங்கள் செல்லும் இருப்பிடம் மற்றும் வாகனங்களின் நகர்வை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவிகளை பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வாகனங்களின் வருகையை துல்லியமாக காண முடியும். ஜி.பி.எஸ்., கருவிகள் விநியோகம் செய்வதற்கு, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.