கவர்னர் பிரச்னை சுமுகமாக முடியும்: இல.கணேசன்
கவர்னர் பிரச்னை சுமுகமாக முடியும்: இல.கணேசன்
கவர்னர் பிரச்னை சுமுகமாக முடியும்: இல.கணேசன்
ADDED : ஜன 03, 2024 11:23 PM

ஸ்ரீவில்லிபுததுார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு உதவிகள் செய்துள்ளது; தொடர்ந்தும் உதவிகள் செய்யும். நாகாலாந்து மக்கள் குறித்து, தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான ஆர்.எஸ்.பாரதி போன்ற சில பேர் தவறாக பேசியுள்ளனர்.
நாகாலாந்து மக்கள் பண்பானவர்கள். பாரம்பரியம் மீது பெருமை மிக்கவர்கள். நாகாலாந்திலும் யாரோ சிலர் செய்யும் தவறுக்கு, ஒட்டுமொத்த மக்களையும் குறை சொல்லக்கூடாது. எனக்கு தமிழகத்தில் தெரிந்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தான்.
தமிழகம், கேரளா போல சில மாநிலங்களில் கவர்னர்களுக்கும், மாநில அரசுக்கும் பிரச்னை இருக்கிறது.
மாநில அரசு என்ன செய்ய வேண்டும்; கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என, அரசியல் சாசனத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
மற்றபடி, கவர்னருக்கும் தெரியும்; அரசுக்கும் தெரியும். தாங்கள் எங்கு வரம்பு மீறுகிறோம் என்பது, இரு தரப்புக்கும் தெரியும்.
அதனால் இருதரப்பும் சர்ச்சையின்றி தொடர முயற்சி செய்து பார்க்கலாம் என சிலர் நினைக்கலாம். அது சுமுகமாக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.