விஜயுடன் கூட்டணி பற்றி எதிர்காலத்தில் முடிவு: ஓபிஎஸ்
விஜயுடன் கூட்டணி பற்றி எதிர்காலத்தில் முடிவு: ஓபிஎஸ்
விஜயுடன் கூட்டணி பற்றி எதிர்காலத்தில் முடிவு: ஓபிஎஸ்
ADDED : செப் 15, 2025 01:21 AM

அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பது குறித்து செங்கோட்டையன் நல்ல செய்தியை சொல்வார். ஒன்றிணைப்பு தொடர்பாக, விரைவில் சசிகலாவை நான் சந்திக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து தினகரன், செங்கோட்டையனையும் சந்திப்பேன். டில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தற்போதைய அரசியல் சூழல் குறித்து செங்கோட்டையன் பேசினார். அவரை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். இப்போதைக்கு நான் டில்லி செல்லவில்லை.
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், இரண்டு நாட்களுக்கு முன் என்னுடன் பேசினார். தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை மாற்றினால், கூட்டணியை விட்டு வெளியேறிய அனைவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது.
த.வெ.க., தலைவர் விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும். அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால், நல்லதே நடக்கும்.
- பன்னீர்செல்வம்,
ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு. க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு