/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 4.30 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ப்பு:அமைச்சர் முத்துசாமி தகவல் 4.30 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ப்பு:அமைச்சர் முத்துசாமி தகவல்
4.30 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ப்பு:அமைச்சர் முத்துசாமி தகவல்
4.30 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ப்பு:அமைச்சர் முத்துசாமி தகவல்
4.30 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ப்பு:அமைச்சர் முத்துசாமி தகவல்
ADDED : செப் 15, 2025 01:21 AM
ஈரோடு:ஈரோட்டில் அண்ணாதுரை பிறந்த நாள், செப்.17ல் முப்பெரும் விழா குறித்து தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில், 70 நாட்களில், 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 622 பேர் தங்களை தி.மு.க.,வில் உறுப்பினராக இணைத்துள்ளனர். இரண்டாம் கட்ட பணியை துவங்கும் போது கூடுதலாக தி.மு.க.,வில் இணைவர். செப்.,17ல் முப்பெரும் விழா கரூரில் நடக்கிறது.
ஒரு லட்சம் இருக்கைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளன. மூன்று லட்சத்துக்கும் மேல் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு சிம்னி ஹோட்டல் முன் வரும், 20ல் மாலை மாவட்ட அளவிலான ஓரணியில் தமிழ்நாடு தீர்மான பொது கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது எம்.எல்.ஏ., சந்திரகுமார், எம்.பி., பிரகாஷ், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில் குமார், மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.