வனத்துறை சிறப்பு முகாம்கள் 25 டன் பிளாஸ்டிக் சேகரிப்பு
வனத்துறை சிறப்பு முகாம்கள் 25 டன் பிளாஸ்டிக் சேகரிப்பு
வனத்துறை சிறப்பு முகாம்கள் 25 டன் பிளாஸ்டிக் சேகரிப்பு
ADDED : செப் 01, 2025 05:11 AM

சென்னை: 'தமிழகத்தில், 52 வனக்கோட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, 25 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
வனப்பகுதிகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு களை அகற்ற, வனத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களில், 52 வனக்கோட்டங்களில், துாய்மை பிரசார இயக்கம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
'சென்னை முதல் கன்னியாகுமரி, நாகப்பட்டினம் முதல் நீலகிரி வரை' என்ற அடிப்படையில், இந்த பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
வனப்பகுதிகள் மட்டுமல்லாது, அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் வகையில், இந்த பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
வனத்துறை பணியாளர்கள் மட்டுமல்லாது, தன்னார்வலர்கள், பொதுமக்கள் என, 9,508 பேர் பங்கேற்றனர். இதில், 25 டன் பிளாஸ்டிக் உட்பட, 31 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
அத்துடன், வனப்பகுதிகளை ஒட்டிய, 53 இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு, 1,905 மஞ்சப்பைகள் வினியோகிக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.