Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தி.மலை கோவிலில் சொகுசு விடுதி கட்டப்படுவது யாருக்காக: பா.ஜ., கேள்வி

தி.மலை கோவிலில் சொகுசு விடுதி கட்டப்படுவது யாருக்காக: பா.ஜ., கேள்வி

தி.மலை கோவிலில் சொகுசு விடுதி கட்டப்படுவது யாருக்காக: பா.ஜ., கேள்வி

தி.மலை கோவிலில் சொகுசு விடுதி கட்டப்படுவது யாருக்காக: பா.ஜ., கேள்வி

ADDED : ஜூலை 02, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
சென்னை : திருவண்ணாமலையில், பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் அளித்த பேட்டி:

திருவண்ணாமலை கோவில் உள் பிரகாரத்தில், அறநிலையத் துறை சொகுசு விடுதி கட்டுகிறது. அது யாருக்காக கட்டப்படுகிறது.

உள்ளூர் பக்தர்கள் கூட, கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கி, சிறப்பு கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கிறது.

கம்பி கம்பியாக கட்டி வைத்திருக்கும் பாதையில் சென்று, சாமி தரிசனம் செய்ய, குறைந்த பட்சம் நான்கு முதல் எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள், முதியோர், இயற்கை உபாதைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதே அளவிற்கு கூட்டம் வரும், அறநிலையத் துறை ஆக்கிரமிப்பில் இல்லாத, சிதம்பரம் நடராஜர் கோவிலில், யார் வேண்டுமானாலும் நேராக சென்று, சுவாமியை ஐந்தே நிமிடத்தில் தரிசனம் செய்ய முடியும்.

சிறப்பு கட்டணம் என்ற பெயரில், காசு பிடுங்கும், தி.மு.க., அரசின் அறநிலையத் துறையால், கிரிவலப் பாதையை சீர் செய்ய முடியவில்லை. ஹிந்து கோவில்களை எல்லாம் அழித்துவிட்டு, ஹிந்துக்களுக்கு மொட்டை போடுவது தான், அறநிலையத் துறையின் வேலை.

இதுவரை, 6,000 கோவில்களை கபளீகரம் செய்துள்ள அறநிலையத் துறை, புதிதாக ஒரு கோவில் கூட கட்டித் தரவில்லை. வெளி நாடுகளில், 100 ஆண்டு பழமையான சிலைகளை கூட, ஏ.சி., அறையில், கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கின்றனர்.

இங்கு, அறநிலையத் துறை அதிகாரிகள் உட்காரும் அறைக்கு ஏ.சி., போடுவதற்காக 1,000 ஆண்டு கால பழமையான கோவில் சுவற்றில் ஓட்டை போடுகின்றனர்.

கம்பி நட்டு காசு பிடுங்குவதற்காக, வள்ளால வன்னிய மஹாராஜாவும், அம்மினியம்மாளும் கட்டிய, அண்ணாமலையார் கோவிலின் தரையில் துளையிடுகின்றனர்.

தி.மு.க., அரசின் இந்த அராஜகங்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் அறம் சார்ந்த மக்கள், ஒரு கொதிப்பலையை நோக்கி செல்வர். அதை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us