Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இறுதிக்கட்டத்தில் பட்டாசு தயாரிப்பு பணி

இறுதிக்கட்டத்தில் பட்டாசு தயாரிப்பு பணி

இறுதிக்கட்டத்தில் பட்டாசு தயாரிப்பு பணி

இறுதிக்கட்டத்தில் பட்டாசு தயாரிப்பு பணி

ADDED : செப் 21, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
சிவகாசி:தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப் பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன.

இதில் நேரடியாக மூன்று லட்சம், மறைமுகமாக 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீத பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது.

எந்தவித பிரச்னையும் இல்லாமல் பட்டாசு தொழில் நடந்து கொண்டிருந்த நிலையில் முதன் முறையாக 2015 ல் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018 ல் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது, பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. அதன்படியே இப்பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. அதே சமயத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவால் 70 முதல் 80 சதவீதம் வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தற்போது பட்டாசு உற்பத்தி பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிகாரிகளின் ஆய்வால் பட்டாசு ஆலைகள் மூடல், மழையின் தாக்கம் என இந்தாண்டு தயாரிப்பு குறைந்துள்ளது.

பட்டாசு தயாரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை தளர்த்தினால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த தொழில் பிழைக்கும் என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us