அரைத்த மாவை அரைக்கும் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் பதில்
அரைத்த மாவை அரைக்கும் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் பதில்
அரைத்த மாவை அரைக்கும் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் பதில்
ADDED : மே 27, 2025 01:41 PM

சென்னை: தி.மு.க., ஆட்சியைக் குறை சொல்ல ஏதுமில்லாததால், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல அவருக்கு ஏதும் கிடைக்கவில்லை. அதனால், தான் திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் குறைத்து கொள்ள விரும்பவில்லை, எனக் கூறினார்.
மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கேள்வி; வெள்ளைக் கொடியுடன் டில்லி சென்று வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., விமர்சனம்
பதில்; நான் தான் ஏற்கனவே தெளிவா சொல்லிவிட்டேனே. வெள்ளைக் கொடியுடனும் போகவில்லை. காவி கொடியுடனும் போகவில்லை என்று கூறிவிட்டேன், என்றார்.
கேள்வி; தி.மு.க., ஆட்சி முடியும் வரை மக்களை தாங்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இ.பி.எஸ்., விமர்சனம்
பதில்; அது எல்லாம் கொள்ளையடித்த ஆட்சி. ஏற்கனவே, சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் உள்ளன. அதை எல்லாம் சொல்லிட்டு இருந்தால், நேரம் பத்தாது. இது எல்லாம் வீம்புக்கு என்று பண்ணுவது. அதற்கு சில மீடியாக்கள் இரையாகி, அந்த செய்திகளை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்றார்.