நகை கடையில் திருடிய ஊழியர்கள் கைது
நகை கடையில் திருடிய ஊழியர்கள் கைது
நகை கடையில் திருடிய ஊழியர்கள் கைது
ADDED : ஜன 01, 2024 06:30 AM
நாகர்கோவில் : மார்த்தாண்டம் அருகே நகை கடையில் சிறுக சிறுக நகை திருடியதாக இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் 12 ஆண்டுகளாக பணிபுரித்து வந்த அனிஷ் 30, என்பவர் உரிமையாளர் வைத்திருந்த நம்பிக்கையை பயன்படுத்தி நகைகளை சிறுகச் சிறுக திருடியுள்ளார்.
திருடிய நகைகளை கணக்கில் தொடர்ந்து வைக்க அங்கு கணக்கு பிரிவில் பணிபுரிந்து வந்த இரண்டு பெண் ஊழியர்கள் உதவி புரிந்தனர். இதனால் சுலபமாக இவர் நகைகளை திருடினார்.
அனிஷின் போக்கில் மாற்றம் தெரிந்த உரிமையாளர் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்ததில் அவர் நகைகளை எடுத்துச் செல்வதும் திரும்ப வரும்போது நகை கையில் இல்லாததும் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவானதை கண்டுபிடித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் ஊழியர்களான அனீஸ் மற்றும் பம்மம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி 21, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அபிஷா 21, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 54 பவுன் நகை மற்றும் ஆறு கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஷாலினி திருட்டு நகையில் கிடைத்த பணத்தில் தனது காதலனுக்கு விலை உயர்ந்த மற்றும் நவீன பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
மூவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.