முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுவிக்க உத்தரவு
முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுவிக்க உத்தரவு
முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுவிக்க உத்தரவு
ADDED : ஆக 05, 2024 11:16 PM

டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் பேகம் கலிதாஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா,76 , நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை விடுதலை செய்து ஹசீனாவிற்கு மாற்றாக கலிதாவை அரசு அமைக்க அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச தேசியவாத கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான பேகம் கலிதா ஜியா பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.