சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு
சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு
சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஊழல்வாதிகள்
சாராய அமைச்சராக 3 ஆண்டுகள் பணி செய்து, அவர் சம்பாதித்த பணத்தில் தான் இன்றைக்கு கரூரில் இத்தனை ஆண்டுகளாக இருக்க கூடிய திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது. இதனை விட அய்யோ பாவம் என்று சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
கண்ணாடியை பாருங்க
முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணாடியை பாருங்கள். எப்படிபட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்து இருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன் பிறகு பாஜவுக்கு அறிவுரை கொடுங்கள்.
இளிச்சவாயன்
சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று கூறி இருப்பதை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும். விஜயின் சுற்றுப் பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோசம் தான். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமலும் விஜய் கூட்டம் நடத்த வேண்டும்.
நேர்மை
மக்களின் வரி பணத்தில் ஒரு ரூபாய் சம்பளம் கிடையாது. வருடம் வருடம் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவேன். என் சொந்த சம்பாத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது. சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய விவசாய நிலத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டி உள்ளது. நான் இன்றைக்கு ரூ.மூன்றரை கோடிக்கு கடனாளியாக இருக்கிறேன். அதனை யாரும் பேசவில்லை. வட்டியும் கட்டுகிறேன். நாங்கள் மட்டும் தான் எங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
நட்பு தொடரும்
எனக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார். கட்சியின் சில நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். பாஜவின் பெருமைமிகு தொண்டனாக நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். டிடிவி தினகரனை ஓரிரு நாட்களில் நட்பின் அடிப்படையில் சந்திக்க இருக்கிறேன். பாஜ கஷ்டத்தில் இருந்த போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாக இருந்தவர்கள். அவர்களோடு அரசியலை தாண்டி என் நட்பு தொடரும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.