Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி: இபிஎஸ் குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி: இபிஎஸ் குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி: இபிஎஸ் குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி: இபிஎஸ் குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 20, 2024 08:07 AM


Google News
Latest Tamil News
சென்னை: ‛‛ தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று சட்டசபை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.

ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்! இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us