/உள்ளூர் செய்திகள்/திருச்சி/விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைதுவிவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
ADDED : ஜூன் 20, 2024 09:03 AM
முசிறி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, விவசாய தோட்டத்தில் சாராயம் ஊறல் மற்றும் சாராயம் வைத்திருந்தவரை முசிறி மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
துறையூர் அருகே, நெட்ட வேலம்பட்டி பகுதியில் ஒருவரது விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருப்பதாக முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனடிப்படையில், முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை தலைமையிலான போலீஸார் நெட்ட வேலம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, விசாரணை மேற்கொண்டதில், நெட்ட வேலம்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி 50, என்பவரது தோட்டத்தில் சாராய ஊறல் மற்றும் சாராயம் இருப்பதை கண்டறிந்தனர். முத்துசாமி தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, பம்பு செட்டில் 750 லிட்டர் சாராயம் ஊறல் மற்றும் 6 லிட்டர் சாராயம் இருந்ததை கைப்பற்றி முத்துசாமியை கைது செய்து, துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.