மக்களாட்சியா... பாசிஸ்டு ஆட்சியா? சீமான் ஆவேசம்
மக்களாட்சியா... பாசிஸ்டு ஆட்சியா? சீமான் ஆவேசம்
மக்களாட்சியா... பாசிஸ்டு ஆட்சியா? சீமான் ஆவேசம்
ADDED : மார் 25, 2025 05:32 AM

சென்னை: 'சமூக விரோதிகளை சுதந்திரமாக உலவ விடும் தமிழக அரசு, துண்டறிக்கை கொடுத்தவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோவை, மருதமலையில் உள்ள முருகன் கோவிலில், தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்த நாம் தமிழர் கட்சியினரை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
தமிழ் மொழியை காக்க, ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க., அரசு, சமஸ்கிருத திணிப்பை வழிபாட்டில் வலிந்து செய்வது ஏன்? சமூக அமைதியையும், சட்டம் - ஒழுங்கையும் சிதைக்கும் சமூக விரோதிகளை வெளியில் சுதந்திரமாக உலவ விடும் அரசு, துண்டறிக்கை கொடுத்தவர்களை கைது செய்யும் என்றால், இது மக்களாட்சியா அல்லது பாசிஸ்டுகளின் ஆட்சியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.