Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம்: தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம்: தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம்: தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம்: தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

ADDED : ஜூன் 12, 2025 08:01 AM


Google News
Latest Tamil News
சென்னை: ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம் அளித்தது குறித்து தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வேளச்சேரி ஏரி கழிவுநீர் கலப்பதாலும், குப்பை கொட்டப்படுவதாலும் மாசடைந்து வருவது பற்றியும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், 2020ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கமும், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், 'ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீர்வளம், சுற்றுச்சூழல், வருவாய், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை, அரசின் தலைமைச் செயலர் நடத்த வேண்டும்.

அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சன்னாசிராஜ் தலைமையிலான குழுவினர், வேளச்சேரி ஏரியில் ஆய்வு நடத்தியதாக, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தீர்ப்பாய உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும், அவர் ஒப்புக்கொண்டார்.

வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கூட்டப்பட்ட, அவசர கூட்ட விபரங்கள் அடங்கிய தலைமைச் செயலரின் அறிக்கையை தாக்கல் செய்ய, அரசு வழக்கறிஞர் நான்கு வார கால அவகாசம் கேட்கிறார். அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.

வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் ஜூலை 7க்குள் தலைமைச் செயலரின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல், தீர்ப்பாயம் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us