ADDED : ஜூன் 12, 2025 07:59 AM
மைசூரு : முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான யதீந்திரா மைசூரில் நேற்று அளித்த பேட்டி:
சின்னசாமி விளையாட்டு அரங்கில், ஆர்.சி.பி.,க்கு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாமல், நிகழ்ச்சி நடத்தியது தவறு. அங்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில், குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்கு முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் எப்படி பொறுப்பாவர்?
முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு, எந்த ஆபத்தும் இல்லை. ஐந்து ஆண்டுகளும் அவரே முதல்வராக நீடிப்பார். காங்., மேலிடமும் கூட, இவர் இத்தனை நாட்கள் மட்டுமே முதல்வர் பதவியில் இருக்க வேண்டும் என, எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.