புதிய கருங்கல் குவாரிகள் 5 மாவட்டங்களில் திறக்க முடிவு
புதிய கருங்கல் குவாரிகள் 5 மாவட்டங்களில் திறக்க முடிவு
புதிய கருங்கல் குவாரிகள் 5 மாவட்டங்களில் திறக்க முடிவு
ADDED : ஜூன் 07, 2025 12:57 AM
சென்னை:தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு, 3,000க்கும் மேற்பட்ட குவாரிகள் வாயிலாக, ஜல்லி, எம்.சாண்ட் வழங்கப்படுகிறது. கட்டுமான திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜல்லி, எம்.சாண்ட் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதை பயன்படுத்தி, குவாரி உரிமையாளர்கள், ஜல்லி, எம்.சாண்ட் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றனர். இதை கருத்தில் வைத்து, புதிய குவாரிகள் திறக்க, கனிமவளத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கனிமவளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டுமான திட்டங்கள் மற்றும் தேவை அடிப்படையில் புதிய குவாரிகள் திறக்க, இடங்களை தேடி வருகிறோம். திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலுார், நாமக்கல் மாவட்டங்களில் கருங்கல் அதிகம் உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, பெரம்பலுார் மாவட்டங்களில் புதிய குவாரிகள் அனுமதிப்பதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.