Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவேகானந்தா குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்க விழா

விவேகானந்தா குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்க விழா

விவேகானந்தா குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்க விழா

விவேகானந்தா குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்க விழா

ADDED : ஜூன் 07, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் - பல்லடம் ரோடு, கணபதிபாளையத்தில், விவேகானந்தா குளோபல் அகாடமி துவக்க விழா நேற்று நடைபெற்றது.

விவேகானந்தா சேவா அறக்கட்டளை சார்பில், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், விவேகானந்தா குளோபல் அகாடமி என்ற புதிய பள்ளி துவங்கப்பட்டுள்ளது. பல்லடம் ரோடு, கணபதிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் பள்ளியை திறந்து வைத்து பேசுகையில், ''அனைத்து பள்ளிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் கல்வியுடன் தேசப்பற்றும் கற்பிக்கப்படுகிறது'' என்றார்.

முன்னதாக பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசி வழங்கினார். மேகாலயா முன்னாள் கவர்னர்சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் துணை தலைவர் ஞானபூபதி தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் எக்ஸ்லான் ராமசாமி முன்னதாக வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் வீனஸ் குமாரசாமி நன்றி கூறினார்.

தொடர்ந்து விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

நல்லவர்கள் வளர்ச்சியைதடுக்க முடியாது

ஒருவன் ஒரு செயலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பிறரை வீழ்த்த வேண்டும் என்று அவசியமில்லை. அடுத்தவர் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. ஒருவரின் வளர்ச்சியை அடுத்தவர் தடுக்க முடியாது. கங்கையை தடுக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. நல்லவர்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. தற்போது நிறைய சமூக வலைதளங்கள் போதை பொருட்களை விட கூடுதல் போதையைத் தருகிறது. மாணவர்கள் அதனை விட்டு வெளியே வர வேண்டும். உயர்வு, வளர்ச்சி என்ற குறிக்கோளை மட்டுமே மனதில் வைத்து செயலாற்ற வேண்டும். பல நாடுகளை பின் தள்ளி இன்று பொருளாதார வளர்ச்சியில் நான்காவது இடத்தில் உள்ளோம். இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசாக நாம் மாறுவோம்.

- ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிரா கவர்னர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us